முதியவரை அடித்து இழுத்துச் சென்ற டாக்டர்: ம.பி.,யில் அதிர்ச்சி சம்பவம்

14

போபால்: ம.பி.,யில் 77 வயது முதியவர் ஒருவரை டாக்டர் ஒருவர் அடித்து இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ம.பி.,யின் சத்தார்பூர் மாவட்டத்தை சேர்ந்த உதவ்லால் ஜோஷி என்ற 77 வயது முதியவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவியை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார்.


அப்போது ராஜேஷ் மிஸ்ரா என்ற டாக்டர் மட்டுமே பணியில் இருந்துள்ளார். இதனால், மனைவி்கு சிகிச்சை கிடைக்க தாமதமானது. அப்போது ஜோஷி, டாக்டரை அணுகி கேட்டு உள்ளார். அப்போது இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ராஜேஸ் மிஸ்ரா மற்றும் மற்றொருவர் இணைந்து ஜோஷியை சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து அவரை இழுத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.


ஜோஷி கூறியதாவது: சீட்டு வாங்கி முறையாகவரிசையில் வந்தேன். ஆனால், எனது முறை வரும் போது டாக்டர் தாக்கினார் என்றார்.


ஆனால், தலைமை மருத்துவர் கூறுகையில், மருத்துவமனையில் கூட்டம் அதிகம் இருந்தது. ஜோஷி வரிசையில் வராமல், முன்னாள் வந்து நின்றதாக தெரிவித்தார்.
கடந்த வியாழன் அன்று நடந்த சம்பவம் தற்போது வீடியோ வெளியானதால் பலரின் கவனத்திற்கு வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Advertisement