மூன்று கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கம்மவார்பாளையம் கிராமத்தில், புதிதாக ஏகாத்தம்மன், பொன்னியம்மன், மாரியம்மன் ஆகிய கோவில்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.
இந்த மூன்று கோவில்களில் கும்பாபிஷேக விழா, ஏப்.,18ம் தேதி, கணபதி பூஜையுடன் வெகு விமரிசையாக துவங்கியது. நேற்று முன்தினம் யாக சாலை பிரவேசமும், மஹா சங்கல்பம் நடந்தது.
நேற்று, காலை 9:50 மணிக்கு கலசப் புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, சிவாச்சாரியர்கள் புனித நீரை, கோபுர கலசத்தின் மீது ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் செய்தனர்.
இதையடுத்து, மூலவர் ஏகாத்தம்மன், பொன்னியம்மன், மாரியம்மன் ஆகிய மூலவர்களுக்கு மஹா அபிஷேகம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement