புகையிலை பொருள் விற்பனை தடுக்க 306 கடைகளில் சோதனை

கோவை : கோவை மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில், எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவின்பேரில், 59 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும், 306 கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

சட்டத்திற்கு விரோதமாக, புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த, 22 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து, காவல்துறையினர் சீல் வைத்தனர்.

சுமார் 46 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, நேற்று ஒரே நாளில் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரி வளாகங்களுக்குஅருகில் உள்ள, பெட்டிக்கடைகள் மற்றும் மளிகை கடைகளில் தனித்தனியாக காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்தனர்.

பள்ளி, கல்லூரி வளாகங்களுக்கு அருகே, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என, எஸ்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் குறித்து, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 94981 -81212 மற்றும் வாட்ஸ் ஆப்: 77081- 00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

Advertisement