புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

போத்தனூர் : கோவை மதுக்கரை அருகேயுள்ள, குரும்பபாளையம் சக்தி மளிகை கடையில், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவானந்தம், போலீஸ் எஸ்.எஸ்.ஐ., செந்தில்குமார் ஆகியோர் சோதனை நடத்தினர்.

கூல் லிப், விமல், வி1, ஹான்ஸ், ஸ்வாகத் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரிந்தது. அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மரப்பாலம் அரசு நடுநிலைப் பள்ளி அருகே, சிவன் என்பவரின் பெட்டிக்கடையில், ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டு, கடைக்கு சீல் வைக்கப்பட்டது. க.க.சாவடி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட காமராஜபுரத்தில், ரங்கசாமி என்பவரின் டீக்கடையில், ஒரு கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

Advertisement