ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் அப்பாசாமி கிளப் அணி அபாரம்

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், ஐந்தாவது டிவிஷன் 'எக்கர் பம்ப்ஸ் டிராபி' போட்டி, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., 'சி' மைதானத்தில் நடந்து வருகிறது. அப்பாசாமி கிரிக்கெட் கிளப் அணியும், கே.எப்.சி.சி., அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த அப்பாசாமி கிரிக்கெட் கிளப் அணி, 50 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 243 ரன்கள் எடுத்தது. அணி வீரர்களான கனகராஜ், 46 ரன்களும், சரவணன், 36 ரன்களும், பசீர் அகமது, 56 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் அருண்குமார் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய கே.எப்.சி.சி., அணி, 45.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 227 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அணி வீரர்களான மணிகண்டன், 54 ரன்களும், வினோத்குமார், 44 ரன்களும், ஜெயக்குமார், 32 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் வெங்கடேஷ் மூன்று விக்கெட்கள் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார்.

Advertisement