'பைக்'கில் பறந்த வாலிபர் தடுப்பில் மோதி பலி

சூணாம்பேடு:இல்லீடு கிராமத்தில், 'பைக்'கில் அதிவேகமாகச் சென்ற இளைஞர், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி உயிரிழந்தார்.

சூணாம்பேடு அடுத்த இல்லீடு கிராமத்தைச் சேர்ந்த நீதி ஆனந்தன் மகன் சசிதரன், 19.

இவர், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில், 'யமஹா ஆர்ஒன் 15' பைக்கில், கயநல்லுார் நோக்கி கிளம்பினார்.

இல்லீடு கிராமத்தில் அதிவேகமாக சென்ற போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் வயல்வெளிக்கு வேலி அமைத்திருந்த கல்லில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சசிதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த சூணாம்பேடு போலீசார், சசிதரனின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement