கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா

பாகூர்: புதுச்சேரி நலப்பணி சங்கம் சார்பில் நடந்த, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதுச்சேரி நலப்பணிச் சங்கம் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. இதன் பரிசளிப்பு விழா, பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் முத்தமிழ் கூடல் இல்லத்தில் நடந்தது. விழாவில், நலப்பணி சங்க தலைவர் நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார்.

வரலாற்று விரிவுரையாளர் முத்துஅய்யாசாமி, கலைமாமணி ராஜாராம் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ரமேஷ் வரவேற்றார்.

துணைச் செயலர் கணபதி, நாடகக் கலைஞர் விஜயலட்சுமி நோக்கவுரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கி பாராட்டினார்.

புதுச்சேரி மகளிர் ஆணையத் தலைவி நாகஜோதி வாழ்த்தி பேசினார். சங்க பொறுப்பாளர் மற்றும் தலைமையாசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Advertisement