தொழிலாளி மண்டையை உடைத்த 'குடி'மகன் கைது

ஆத்துார்: ஆத்துார், மாரிமுத்து சாலையை சேர்ந்தவர் மணிகண்டன், 34. தெற்கு உடையார்பாளையம், 3வது காந்தி சாலையை சேர்ந்தவர் ஜெகதீசன், 40. கூலித்தொழிலாளியான இவர்கள், நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்தபோது தகராறு செய்துள்ளனர்.

அப்போது பீர் பாட்டிலில் மணிகண்டன் தலையில் அடித்ததில் அவருக்கு மண்டை உடைந்தது. படுகாயமடைந்த மணிகண்டன், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆத்துார் டவுன் போலீசார், ஜெகதீசனை, நேற்று கைது செய்தனர்.

Advertisement