பெண்ணை தாக்கிய புகார்; கணவரின் நண்பர்கள் கைது

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், தும்பலை சேர்ந்தவர் தமிழ்மணி, 27. அவரது மனைவி ரிஸ்வானா பாத்திமா, 30. இவர்கள், 2024 நவ., 19ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடால், ஒரு மாதமாக பிரிந்துள்ளனர். கடந்த, 18 இரவு, 9:00 மணிக்கு, தமிழ்மணி, அவரது நண்பர்கள் உள்பட, 6 பேர், ரிஸ்வானா பாத்திமாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்று, ரிஸ்வானா பாத்திமா, அவரது அக்கா கணவர் அஜய்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து ரிஸ்வானா பாத்திமா புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்து, தமிழ்மணியின் நண்பர்களான, அஜித்குமார், 28, கோபி, 38, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.

Advertisement