ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலம், பொகாரோ மாவட்டத்தில் உள்ள லூகு மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கிய இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாருடன், பாதுகாப்பு படையினர் இணைந்து சோதனை நடத்தினர். பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதால், பாதுகாப்பு படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
8 பேர் உடல்கள் மீட்பு
இது குறித்து ஜார்க்கண்ட் டி.ஜி.பி., கூறியதாவது: பொகாரோ மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் ரூ.1 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் விவேக் கொல்லப்பட்டார். இதுவரை மாவோயிஸ்டுகள் 8 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, என்றார்.
மேலும்
-
போப் பிரான்சிஸ் காலமானார்!
-
அப்போ இனித்தது... இப்போ கசக்குதா? தி.மு.க.,வுக்கு இ.பி.எஸ்., கேள்வி
-
அ.தி.மு.க., நிபந்தனை விதிக்க தயாரா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
குறைந்தது ஐ.பி.எல்., மோகம்; சொத்தை ஆட்டத்தால் சோகத்தில் ரசிகர்கள்; டிக்கெட் விற்பனை மந்தம்!
-
யாரிடம் நிதியும், அதிகாரமும் இருக்கிறதோ, அவரிடம் கேளுங்க; அமைச்சர் தியாகராஜன் விரக்தி
-
A+ பிரிவில் கோலி, ரோகித்; பி.சி.சி.ஐ.,யின் மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு