A+ பிரிவில் கோலி, ரோகித்; பி.சி.சி.ஐ.,யின் மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தப் பட்டியலை பி.சி.சி.ஐ., இன்று வெளியிட்டுள்ளது. அதில், ஏ பிளஸ் பிரிவில் கோலி, ரோகித் உள்பட 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.
ஆண்டுதோறும் வீரர்களின் தகுதியையும், திறமையையும் மதிப்பீடு செய்வதற்காக, பி.சி.சி.ஐ., வருடாந்திர ஒப்பந்தத்தை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்தம் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஏ பிளஸ் பிரிவில் விராட் கோலி, ரோகித் ஷர்மா, பும்ரா, ஜடேஜா ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.
ஏ பிரிவில், சிராஜ், கே.எல்.ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, ஷமி, ரிஷப் பன்ட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
பி பிரிவில் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஷ் ஐயர் ஆகியோர் உள்ளனர்.
சி பிரிவில், ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெயிக்வாட், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜத் பட்டிதர், துருவ் ஜூரேல், சர்பிராஷ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷான், அபிஷேக் ஷர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ரானா ஆகியோர் உள்ளனர்.
இந்தப் பட்டியலின் அடிப்படையில் தான் ஊதியம், பாதுகாப்பு, அணியில் இடம்பெறுவதற்கான முக்கியத்துவம் உள்ளிட்டவை வீரர்களுக்கு வழங்கப்படும்.
மேலும்
-
விமானப்படை ஹெலிகாப்டர் குஜராத்தில் அவசரமாக தரையிறக்கம்: அதிகாரிகள் விசாரணை
-
மேற்கு வங்க கவர்னருக்கு திடீர் நெஞ்சு வலி: நேரில் மருத்துவமனை சென்ற மம்தா
-
மின்வாரிய ஊழியர்கள் மீது தி.மு.க.,வினர் தாக்குதல்: நடவடிக்கை எடுக்காதது ஏன்; அண்ணாமலை கேள்வி
-
புழக்கத்தில் உள்ள புது வகை ரூ.500 கள்ள நோட்டு: மத்திய அரசு அறிவுறுத்தல்
-
டாஸ்மாக் வழக்கு: ஏப்.,23ம் தேதி ஐகோர்ட் தீர்ப்பு
-
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 2 புதிய நீதிபதிகள் நியமனம்