தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது!

3


சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,120க்கு விற்பனை ஆகிறது.


அமெரிக்கா - சீனா இடையில் நிலவும் வர்த்தக போர் உள்ளிட்ட காரணங்களால், சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்கின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால், நம் நாட்டில் அதன் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது.


இந்நிலையில் இன்று (ஏப்ரல் 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,120க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,015க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9 ஆயிரத்தை தாண்டி நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Advertisement