அக்சார்தம் கோவிலில் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்- உஷா தம்பதி வழிபாடு

2


புதுடில்லி: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மனைவி உஷாவுடன் இன்று (ஏப்ரல் 21) டில்லி வந்தடைந்தார். அக்சார்தம் கோவிலில் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்- உஷா தம்பதி வழிபாடு செய்தனர்.


அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ் மற்றும் அவர் மனைவி உஷா ஆகியோர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்தனர். துணை அதிபர் வான்ஸை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார். டில்லியில் வான்ஸ் குடும்பத்தினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Tamil News
Tamil News
Tamil News

அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், அவரது மனைவி உஷா, குழந்தைகள், டில்லி அக்சார்தம் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். துணை அதிபர் வான்ஸ் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். அப்போது இரு தரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசனை செய்யப்பட உள்ளது.


டில்லி, ஜெய்ப்பூர், ஆக்ரா உள்ளிட்ட நகரங்களுக்கும் வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதற்கு முன்னர், ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் துணை அதிபராக இருந்த ஜோ பைடன் 2013ம் ஆண்டு டில்லி வந்து இருந்தார்.


இதன் பிறகு, அந்நாட்டின் துணை அதிபர் தற்போது தான் டில்லி வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement