ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தக்கோரி மனு: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

22


புதுடில்லி: மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். ''அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக ஏற்கனவே எங்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன'' என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


மேற்குவங்கத்தில் வக்ப் சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்த வன்முறையில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், ''மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும்'' என வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு, ''இதை அமல்படுத்த ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக ஏற்கனவே எங்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன'' என கூறியது.



மசோதாக்கள் மீது ஜனாதிபதி திரவுபதி முர்மு முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்த சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை பா.ஜ., எம்.பிக்கள் விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement