டாஸ்மாக் வழக்கு: ஏப்.,23ம் தேதி ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஏப்ரல் 23ம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளிக்கிறது.
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானது என, அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும், சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தினோம் என அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 21) அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு ஏப்ரல் 23ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.







மேலும்
-
10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் போனஸ் மதிப்பெண்
-
நெசவாளர் உதவித்தொகை விவகாரம்; தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
-
தமிழக காங். எம்.எல்.ஏ.வுக்கு 3 மாதம் சிறை: அதிகாரிகளை தாக்கிய வழக்கில் தீர்ப்பு
-
எந்த குடிமகனும் பின்தங்கி இருக்க கூடாது: பிரதமர் மோடி பேச்சு
-
விமானப்படை ஹெலிகாப்டர் குஜராத்தில் அவசரமாக தரையிறக்கம்: அதிகாரிகள் விசாரணை
-
மேற்கு வங்க கவர்னருக்கு திடீர் நெஞ்சு வலி: நேரில் மருத்துவமனை சென்ற மம்தா