புழக்கத்தில் உள்ள புது வகை ரூ.500 கள்ள நோட்டு: மத்திய அரசு அறிவுறுத்தல்

10

புதுடில்லி: புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்தில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ''வங்கிகள், செபி, சி.பி.ஐ., என்.ஐ.ஏ., உள்ளிட்ட அமைப்புகள் விழிப்புடன் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


* புதுவகையான 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளது.


* "RESERVE" என்ற சொல்லில் "E" தவறாக "A" என அச்சிடப்பட்டுள்ளது.

* உண்மையான நோட்டை போலவே மிகத் துல்லியமாக புதிய வகை ரூ.500 கள்ள நோட்டு அச்சிடப்பட்டு உள்ளது.



* வங்கிகள், செபி, சி.பி.ஐ., என்.ஐ.ஏ., உள்ளிட்ட அமைப்புகள் இந்த கள்ள நோட்டு விவகாரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.


* கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்களை கண்டுபிடிக்க என்.ஐ.ஏ., போன்ற அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Advertisement