எந்த குடிமகனும் பின்தங்கி இருக்க கூடாது: பிரதமர் மோடி பேச்சு

புதுடில்லி: ''இந்தியாவின் முழுமையான வளர்ச்சி என்பது எந்த கிராமமும், எந்த குடும்பமும், எந்த குடிமகனும் பின்தங்கி இருக்கக்கூடாது என்பதுதான்'' என பிரதமர் மோடி பேசினார்.
டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: எங்கள் அரசு செயல்படுத்தி வரும் கொள்கைகள் அடுத்த 100 ஆண்டுகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும். இந்தியாவின் முழுமையான வளர்ச்சி என்பது எந்த கிராமமும், எந்த குடும்பமும், எந்த குடிமகனும் பின்தங்கி இருக்கக்கூடாது என்பதுதான். ஏழைகளின் பிரச்னைகளை அரசு ஊழியர்கள் கேட்க வேண்டும்.
அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் முன்னுரிமை கொள்ள வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்காக அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும். இன்று நாம் வேகமாக மாறிவரும் உலகில் இருக்கிறோம். வேகமாக மாறி வரும் காலங்களில் உலகளாவிய சவால்களை நாம் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
உணவு, நீர் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு இன்னும் ஒரு பெரிய சவாலாக இருப்பதை காண்கிறீர்கள். இது ஒரு பெரிய நெருக்கடி. நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள் அரசு ஊழியர்கள். நீங்கள் வெறும் அரசு ஊழியர் மட்டுமல்ல, புதிய இந்தியாவின் கைவினைஞர்கள். கடந்த 11 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள வெற்றிகள், வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை பெரிதும் வலுப்படுத்தியுள்ளன.
இந்தியா இப்போது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அடிப்படை வசதிகளை நிறைவு செய்வதே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.








மேலும்
-
அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ்- பிரதமர் மோடி சந்திப்பு
-
சிறுவனை காப்பாற்றிய இளைஞருக்கு மோதிரம் பரிசளித்து இ.பி.எஸ் பாராட்டு
-
மஹா. அரசியலில் திடீர் திருப்பம்: காங். முக்கிய தலைவர் பா.ஜ.வில் சேர முடிவு
-
நீலகிரியில் 4 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
-
புதிய போப் தேர்வு நடைமுறைகளை தொடங்கிய கத்தோலிக்க திருச்சபை
-
பிரீமியர் லீக் போட்டி: குஜராத் அணி பேட்டிங்