சிறுவனை காப்பாற்றிய இளைஞருக்கு மோதிரம் பரிசளித்து இ.பி.எஸ் பாராட்டு

சென்னை: தனது உயிரை பணயம் வைத்து சிறுவனை காப்பாற்றிய இளைஞர் கண்ணனுக்கு மோதிரம் பரிசளித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் இ.பி.எஸ் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்.


சென்னை அருப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராபர்ட் மகன் ராயன் 9, என்ற சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த சிறுவன்,கடந்த ஏப்.16 ம் தேதி பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிகொண்டிருந்த வேளையில், சென்னை வளசரவாக்கம் பகுதியில் தேங்கிய மழைநீரில் நடந்து சென்றபோது, மின்சாரம் தாக்கியது.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு இளைஞர்,சிறுவன் உயிருக்கு போராடியதைக் கண்டதும், தனது உயிரை பணயம் வைத்து துரிதமாக செயல்பட்டு அச்சிறுவனை மீட்டார்.

இதனையடுத்து காப்பாற்றிய இளைஞர் கண்ணன் என்பது தெரியவந்தது. கண்ணன் கூறுகையில், எனது உயிரை விட சிறுவனின் உயிரை காப்பாற்றுவது முக்கியம் என்று செயல்பட்டதாக கூறினார்.

அவரது செயலை அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் இ.பி.எஸ், சிறுவனை காப்பாற்றிய இளைஞர் கண்ணனை அழைத்து , தங்க மோதிரம் பரிசளித்து அவரை வாழ்த்தினார்

Advertisement