மஹா. அரசியலில் திடீர் திருப்பம்: காங். முக்கிய தலைவர் பா.ஜ.வில் சேர முடிவு

மும்பை: மஹாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சங்ராம் தோப்டே விரைவில் பா.ஜ.,வில் இணைகிறார்.
சங்ராம் தோப்டே புனே மாவட்டம் போர் தொகுதியில் இருந்து 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்து எடுக்கப்பட்டார். பாரம்பரிய காங்.குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை அனந்த்ராவ் தோப்டே 6 முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்.
2024 சட்டசபை தேர்தலில் தேசியவாத காங். வேட்பாளர் சங்கர் மண்டேகரிடம் தோல்வியை தழுவினார். கட்சிக்குள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறி வந்த சங்ராம் தோப்டே, சில நாட்களுக்கு முன்பு கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். அதன் பின்னர் தமது சமூக வலைதள பக்கத்தில் இருந்த காங்கிரஸ் சின்னத்தையும் நீக்கினார்.
இந் நிலையில் அவர் விரைவில் பா.ஜ.,வில் தம்மை இணைத்துக் கொள்ள இருக்கிறார். இதுகுறித்து சங்ராம் தோப்டே கூறி இருப்பதாவது;
காங். தலைமை என்னை புறக்கணித்ததே இதற்கு காரணம். சில ஆண்டுகளாக நான் கட்சியில் இருந்து புறக்கணிக்கப்பட்டேன். 2019ம் ஆண்டு மகா. விகாஸ் அகாடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால் கிடைக்கவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் எதிர்பார்த்தேன். அதுவும் கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






மேலும்
-
குஜராத் அணி அசத்தல் வெற்றி: சுப்மன் கில், சுதர்சன் அரைசதம்
-
ஜிம்பாப்வே அணி அபாரம்: வங்கதேச பவுலர்கள் ஏமாற்றம்
-
மீண்டும் செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைத்த 'இஸ்ரோ'
-
கார்கே கூட்டத்தில் காலி இருக்கைகள்: காங்கிரஸ் மாவட்ட தலைவர் சஸ்பெண்ட்
-
நீலகிரியில் காட்டு யானை தாக்கி பெண் பலி!
-
தமிழகத்தின் பவித்ரா 'தங்கம்': தேசிய 'போல் வால்ட்' போட்டியில்