சேத்துாரில் பூக்குழி விழா

சேத்துார்: சேத்துார் எக்கலாதேவி அம்மன் கோயில் பங்குனி பொங்கலை முன்னிட்டு நடந்த பூக்குழி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

சேத்துார் எக்கலாதேவி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா ஏப்.12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது.

9ம் நாள் அம்மன் வீதி உலாவில் சிம்ம வாகனத்தில் பூச்சப்பரம், தண்டியில் சப்பரத்தில் சுற்றி வந்ததை அடுத்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை தொடர்ந்து வந்த பக்தர்கள் கோயில் முன்பு வளர்க்கப்பட்ட பூக்குழியில் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.

Advertisement