அப்போ டிரம்... இப்போ டிராலி சூட்கேஸ்; கணவனை கொலை செய்த மனைவி

கான்பூர்: துபாயில் இருந்து வந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, உடலை டிராலி சூட்கேஸில் போட்டு வைத்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் உத்தரபிரதேசம் மீரட்டில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து, உடலை பல துண்டுகளாக வெட்டி, தண்ணீர் டிரம்மில் போட்டு அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, உத்தரபிரதேசத்தில் டிரம் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் அதேபோன்ற மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள பத்தௌலி கிராமத்தைச் சேர்ந்தவர் நவ்ஷத்,37, என்பவர் துபாயில் பணியாற்றி வரும் நிலையில், 10 நாட்களுக்கு முன்புசொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.
இவர் தனது வீட்டில் இருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ள கோதுமை விவசாய நிலத்தில், டிராலி சூட்கேஸில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சூட்கேஸில் இருந்த பாஸ்போர்ட்டை வைத்தே இவர் பற்றிய தகவலை போலீசார் உறுதி செய்தனர். அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
நவ்ஷாத் மனைவிக்கும், அவரது உறவினருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதற்கு இடையூறாக இருந்த காரணத்தினால், கள்ளக்காதலனுடன் கணவனை கொலை செய்து உடலை டிராலி சூட்கேஸில் வைத்து, 60 கி.மீ., தள்ளி கொண்டு வந்து போட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை வழக்கில் மனைவியை கைது செய்த போலீசார், தப்பியோடிய கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல, பேரெய்லி பகுதியில் 35 வயதுடைய தூய்மை பணியாளரை, அவரது மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.




மேலும்
-
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழக மாணவர் சாதனை
-
காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 6 பேர் காயம்
-
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும்: வாடிகன் அறிவிப்பு
-
அமைச்சர் பொன்முடி மீது புகார்; கோர்ட்டில் அரசு தரப்பு அதிர்ச்சி தகவல்!
-
தமிழகத்திற்கு கடத்த முயன்ற ரூ.8 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: இலங்கையில் இருவர் கைது
-
ரூ.5 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் வி.ஏ.ஓ.,!