எஸ்.எஸ்.கோட்டையில் நாளை கண் பரிசோதனை

திருப்புத்துார்: எஸ்.எஸ். கோட்டையில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

திருப்புத்துார் எஸ்.எம். மருத்துவமனை, நேஷனல்சமுதாய கல்லுாரி இணைந்து எஸ்.எஸ். கோட்டையில் நாளை இலவச கண் பரிசோதனை முகாமை நடத்துகின்றனர்.

எஸ். எஸ்.கோட்டை ஊராட்சி அலுவலகத்தில் காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை முகாம் நடைபெறும். சுற்று வட்டாரக் கிராமத்தினர்முகாமில் கண் பரிசோதனை செய்ய அழைக்கப்பட்டுள்ளனர்.

தேவையானவர்களுக்கு இலவச கண் புரை அறுவை சிகிச்சை திருப்புத்துார் எஸ்.எம். மருத்துவமனையில் செய்யப்படும்.

Advertisement