அன்னதான மண்டபத்தில் துாக்கிட்டு தற்கொலை

இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள நாகமுகுந்தன் குடி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் மணிவேலு 60.

இவர் குடும்பத்தோடு சென்னையில் வசித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இவர் மட்டும் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பூஜைகளை செய்வதற்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.

நேற்று மதியம் 2:00 மணிக்கு தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் கம்பியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இளையான்குடி போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement