வாகனங்கள் மோதல் 9 வயது சிறுமி பலி
ராணிப்பேட்டை : வாலாஜா அருகே வாணிச்சத்திரத்தில், லாரி, ஆட்டோ, மற்றொரு லாரி மற்றும் கார் என, நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில், ஆட்டோவில் வந்த 9 வயது சிறுமி பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாணிச்சத்திரம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, வேலுாரிலிருந்து சென்னையை நோக்கி சென்ற லாரி, திடீரென பிரேக் அடித்து நின்றது. இதில், பின்னால் வந்த ஆட்டோ, மற்றொரு லாரி மற்றும் கார் என அடுத்தடுத்து, நான்கு வாகனங்கள் மோதின.
இதில், ஆட்டோவில் குடும்பத்துடன் பயணித்த, சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின், 9 வயது மகள் நிஜிதா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரே பைக்கில் மாணவர்கள் 7 பேர் பயணம்: நடவடிக்கை பாயுமா?
-
சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு; ஜனநாயக படுகொலை என இ.பி.எஸ்., காட்டம்
-
இது தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிரானது; சுட்டிக்காட்டும் அன்புமணி
-
அப்போ டிரம்... இப்போ டிராலி சூட்கேஸ்; கணவனை கொலை செய்த மனைவி
-
ஏப்.25ம் தேதி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; இ.பி.எஸ். அறிவிப்பு
-
சென்னையில் புறநகர் ரயில் தடம்புரண்டு திடீர் விபத்து: பயணிகள் அச்சம்
Advertisement
Advertisement