தொழிலாளிக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

திருவாரூர் : போக்சோ வழக்கில், தொழிலாளிக்கு, 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவாரூர் மகிளா நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, தென்குவளவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 45. இவர், சிறுமி ஒருவரிடம், ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் பலாத்காரம் செய்தார். நன்னிலம் அனைத்து மகளிர் போலீசில் சிறுமி அளித்த புகார்படி, 2020ல் சங்கர் மீது மூன்று பிரிவுகளில், போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று, வழக்கின் இறுதி விசாரணை நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ், சங்கருக்கு, 40 ஆண்டுகள் சிறை தண்டனை, 4,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

Advertisement