ரூ.5 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் வி.ஏ.ஓ.,!

11

விருதுநகர்: விவசாய நிலத்தை அளந்து தர ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., இப்ராஹிம், உதவியாளர் சிங்காரம் ஆகிய இரண்டு பேரை லஞ்சம் ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள வதுவார்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,வாக இப்ராஹிம்,54, பணிபுரிந்து வருகிறார். இவரிடம் வதுவார்பட்டியை சேர்ந்த சின்னதம்பி, 34, என்பவர் விவசாய நிலத்தை அளந்து தர கோரி அணுகி உள்ளார். இதற்கு, வி.ஏ.ஓ., இப்ராஹிம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.


லஞ்சம் கொடுக்கம் விரும்பாத, சின்னதம்பி லஞ்சம் ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, லஞ்சம் ஒழிப்பு துறை போலீசார் அறிவுறுத்தல் படி, ரசாயனம் தடவிய பணத்தை, வி.ஏ.ஓ., இப்ராஹிமிடம், சின்னதம்பி ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்துள்ளார். ஆனால், லஞ்சப்பணத்தை உதவியாளரிடம் கொடுக்க அறிவுறுத்தி உள்ளார்.


இதையடுத்து, உதவியாளர் சிங்காரத்திடம் சின்னத்தம்பி லஞ்சப்பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இப்ராஹிம், சிங்காரம் ஆகிய இருவரை கையும், களவுமாக பிடித்தனர். அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement