ஓசூரில் புதிய விமான நிலையம் ; இறுதி சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தாக்கல்

12

சென்னை; ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் விமான போக்குவரத்து ஆணையம் தாக்கல் செய்து இருக்கிறது.



தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களுடன் மொத்தம் 6 விமான நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என அங்குள்ள மக்களும், தொழில் துறையினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.


இதையடுத்து, 2000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் ஓசூரில் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.


அதனை தொடர்ந்து, 2 இடங்களை(ஓசூர் கிழக்கில் ஒன்று, தெற்கில் ஒன்று) தேர்வு செய்து இவற்றில் ஏதேனும் ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்கலாம் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அனுமதி கேட்டு இருந்தது.


இந் நிலையில், ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இறுதி சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம்,விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ளது. இந்த இரு இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement