சத்தீஸ்கரில் முகாமில் மின்சாரம் தாக்கி சி.ஆர்.பி.எப்., வீரர் உயிரிழப்பு

பிஜாப்பூர்: சத்தீஸ்கரின் நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள முகாமில் மின்சாரம் தாக்கி, சி.ஆர்.பி.எப்., வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள முகாமில் மின்சாரம் தாக்கி சி.ஆர்.பி.எப்., வீரர் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கிய சிறிது நேரத்திலேயே, வீரர் மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இறந்த வீரர் சுஜய் பால் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், பிஜாப்பூரில் நக்சலைட்டுகள் பதுக்கி வைத்திருந்த, வெடிகுண்டு வெடித்து, வீரர் மனோஜ் பூஜாரி (26) உயிரிழந்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்
-
குஜராத்தில் தனியார் பயிற்சி விமானம் வெடித்தது: விமானி பலி
-
சவுதியில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு
-
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழக மாணவர் சாதனை
-
காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: ஒருவர் பலி; 6 பேர் காயம்
-
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும்: வாடிகன் அறிவிப்பு
Advertisement
Advertisement