ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

4

சென்னை: ''பாரதிதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை தமிழ் வார விழாவாக கொண்டாடப்படும்'' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் 110 விதிகளின் கீழ், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
எளிமையான சொற்கள் மூலம் வலிமையான கருத்துகளை சொன்னவர் பாரதிதாசன். பாரதிதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை தமிழ் வார விழாவாக கொண்டாடப்படும்.



அரசு சார்பில் இலக்கிய கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பள்ளிக் கூடங்களில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.


செந்தமிழை பரப்ப இந்த விழா பயன்படும். பாரதிதாசன் புகழை கொண்டாடும் விழாவில் அனைவரும் பங்கேற்று தமிழின் புகழை உயர்த்த வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement