சித்ரா பவுர்ணமி நாளில் அண்ணாமலையார் கோவில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து

திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமி நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வி.ஐ.பி., தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.



புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மே 11ம் தேதி சித்ரா பவுர்ணமி கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். கிரிவல பாதையில் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள வசதிகளை பார்வையிட்டார்.


அதன் பின்னர் அவர் கூறுகையில், சித்ரா பவுணர்மி நாளில் வழக்கம் போல் இந்த ஆண்டும் வி.ஐ.பி,. தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. போலி நெய் தீபம் விற்க, கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 சாலைகளை இணைக்கும் வகையில் 20 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படும்.


பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கக்கூடும் என்பதால் தேவையான இடங்களில் கழிவறைகள், குடிநீர் வசதிகள் செய்யப்பட இருக்கின்றன என்றார்.

Advertisement