'டாஸ்மாக்' மது விற்பனையால் அரசுக்கு ரூ.48,344 கோடி வருவாய்!

30


சென்னை: கடந்த 2024 - 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.48,344 கோடி என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது:


* கடந்த 2024 - 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.2,488 கோடி அதிகரித்துள்ளது. அதாவது, 2024 - 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.48,344 கோடி ஆக இருந்தது.


* கடந்த 2023-24ம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.45,856 கோடியாக இருந்தது.



* 2022 - 23ல், 44,121.13 கோடி ரூபாயாகவும், 2021 - 22ல், 36,050.65 கோடி ரூபாயாகவும் இருந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ஆண்டுதோறும் டாஸ்மாக் நிறுவனம் மூலம் தமிழக அரசுக்கு வருமானம் அதிகரித்து கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement