தொகுப்பூதிய செவிலியர்களின் ஊதியம்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் 2 ஆண்டுகளுக்கு பின்பு பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறைந்த அளவிலான செவிலியர்கள் மட்டுமே பணிநிரந்தரம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து தொகுப்பூதிய செவிலியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக தொகுப்பூதிய செவிலியர்கள் பணியாற்றினால், அவர்களுக்கும் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். இது குறித்து குழு அமைத்து, 6 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும், என்று கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அரசு நிறைவேற்றாததால், செவிலியர்கள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்து வந்த நீதிமன்றம், இன்று தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கப்படும் இணையான ஊதியத்தை தொகுப்பூதிய செவிலியர்களுக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 2018ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை 3 மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆணையிட்டு வழக்கை முடித்து வைத்தது.




மேலும்
-
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்
-
குஜராத்தில் தனியார் பயிற்சி விமானம் வெடித்தது: விமானி பலி
-
சவுதியில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு
-
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழக மாணவர் சாதனை
-
காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: ஒருவர் பலி; 6 பேர் காயம்
-
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும்: வாடிகன் அறிவிப்பு