வர்த்தக ஒப்பந்த விதிமுறைகள் இறுதியாகிவிட்டது: அமெரிக்க துணை அதிபர் பேச்சு

ஜெய்ப்பூர்: இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு விட்டன என அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறியுள்ளார்.
இந்தியா வந்துள்ள ஜேடி வான்ஸ் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தொடர்ந்து இன்று ராஜஸ்தான் வந்த வான்ஸ், ஜெய்ப்பூரில் நடந்த மாநாட்டில் பேசியதாவது:
முந்தைய அமெரிக்க அரசு, இந்தியாவை சம்பளம் குறைவாக பெறும் தொழிலாளியாக பார்த்தது.
இந்தியாவை போலவே, நாங்களும் எங்களது வரலாறு, கலாசாரம், மதம் ஆகியவற்றை போற்ற விரும்புகிறோம். நாங்கள் எங்கள் நண்பர்களுடன் வர்த்தகம் செய்து நல்ல ஒப்பந்தம் போட விரும்புகிறோம். நியாயமான மற்றும் பகிரப்பட்ட தேசிய நலன்கள் அடிப்படையில் வர்த்தக கூட்டாளிகளை தேடுகிறோம்.
வர்த்தகப் போரை துவங்கியதாக அதிபர் டிரம்ப்பை விமர்சிக்கின்றனர். ஆனால், உண்மையை எப்போதும் மறைக்க முடியாது. அமெரிக்கா, இந்தியா போன்ற நண்பர்களுடன் சேர்ந்து நம் மக்கள் அனைவருக்கும் மதிப்பு மிக்க எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக உலகளாவிய வர்த்தகத்தை மறுசீரமைக்க அவர் முயற்சி செய்கிறார்.
அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாகும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் இது நமது நாடுகளுக்கு இடையே ஒரு இறுதி ஒப்பந்தத்திற்கான திட்டத்தை எடுத்துக்காட்டுகிறது.
வர்த்தக ஒப்பந்தத்திற்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு விட்டன. மற்ற நாடுகளை விட இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா அதிகளவு ராணுவ பயிற்சியில் ஈடுபடுகிறது. எங்களது குழந்தைகளுக்கு பிரதமர் மோடியை மிகவும் பிடிக்கும். அதேபோல் எனக்கும் அவரை பிடிக்கும். எதிர்கால உறவுக்கு இது சிறந்த அடித்தளம் என நினைக்கிறேன்.
இந்தியாவின் அணுசக்தி உற்பத்தி இலக்கை அடைய, அமெரிக்காவின் ஆற்றல் மிகவும் உதவும் என நம்புகிறேன். அதேபோல் செயற்கை நுண்ணறிவுக்கும் அமெரிக்கா உதவும். இவ்வாறு ஜேடி வான்ஸ் பேசினார்.


மேலும்
-
காஷ்மீர் தாக்குதல்: அமெரிக்க துணை அதிபர் கண்டனம்
-
பயங்கரவாதிகளின் அட்டூழியத்திற்கு கண்டனம்: ஸ்ரீநகரில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி
-
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற கர்நாடக தொழிலதிபருக்கு ஏற்பட்ட சோகம்; மனைவி கண்ணீர்
-
24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம்: தமிழக அரசு
-
நாங்கள் ஓடிவிட்டோம், திரும்பிப் பார்க்கவே இல்லை: நூலிழையில் தப்பிய நாக்பூர் தம்பதி பேட்டி
-
குதிரை மிரண்டதில் சிறுவன் படுகாயம்