தேனீக்கள் கொட்டி 20 மாணவர்கள் காயம்

சங்கராபுரம்,:சங்கராபுரம் அருகே அரசு பள்ளியில் தேனீக்கள் கடித்து 20 மாணவர்கள் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கராபுரம் அடுத்த பொய்குணம் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு, 6 முதல் 10 வகுப்பு வரை, 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

நேற்று மதியம் 11:00 மணி அளவில் இடைவேளையின் போது, பள்ளி வளாகத்தில் இருந்த தேன் கூட்டில் இருந்து, திடீரென தேனீக்கள் பறந்து வந்து மாணவர்களை கொட்டின.

இதில் காயம் அடைந்த, 20 மாணவர்கள், சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement