காஷ்மீர் தாக்குதல்: தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: 3 பேர் காயம்

25


சென்னை: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் காயமடைந்துள்ளனர்.


காஷ்மீரின் பஹல்காமில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்து உள்ளனர். பயங்கரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


இந்நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பயங்கரவாத தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை. 3 பேர் காயமடைந்து உள்ளனர். இதில் 2 பேரின் உடல்நிலை சீராக உள்ளது. ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதிகள் இன்று மாலை காஷ்மீர் சென்று, உடனடியாக பணிகளை மேற்கொள்வார்கள். டில்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகள் அவர்களுடன் தெடர்பில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த 28 பேர், பத்திரமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement