ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 சரிவு; ஒரு சவரன் ரூ.72,120!

1

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 23) 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து, ஒரு சவரன் ரூ. 72,120க்கு விற்பனை ஆகிறது.


தமிழகத்தில் நேற்று முன்தினம், ஏப்ரல் 21ம் தேதி ஆபரண தங்கம் கிராம், 9,015 ரூபாய்க்கும், சவரன், 72,120 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஏப்ரல் 22) ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, 275 ரூபாய் உயர்ந்து, 9,290 ரூபாய்க்கு விற்பனையானது.


இந்நிலையில் இன்று (ஏப்ரல் 23) 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து, ஒரு சவரன் ரூ. 72,120க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.275 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,015க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,200 குறைந்து நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது.

Advertisement