ரூ.5 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர் கைது

2

மதுரை: மதுரையில் பட்டா ஏற்பாடு செய்ய ரூ.5,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் ராமராஜ், 35, கைது செய்யப்பட்டார்.


மதுரை வளையங்குளத்தில் சுரேஷ் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வாங்க முயற்சி செய்துள்ளார். அவர் பட்டா ஏற்பாடு செய்து தருமாறு, சர்வேயர் ராமராஜ் என்பவரை அணுகி உள்ளார்.



அவர் பட்டா ஏற்பாடு செய்ய ரூ.5000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத, சுரேஷ் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுறுத்தல் படி, ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை சர்வேயர் ராமராஜிடம் சுரேஷ் கொடுத்துள்ளார்.

அப்போது, மறைந்து இருந்த லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் சர்வேயர் ராமராஜை கையும், களவுமாக பிடித்து, கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement