இபிஎஸ்.,க்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை

சென்னை: அதிமுக பொதுச்செயலர் இ.பி.எஸ்.,க்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட கே.சி. பழனிசாமி, கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் இ.பி.எஸ்., தன்னைப்பற்றி அவதூறாக கருத்து தெரிவித்ததாக வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் இ.பி.எஸ்., நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில்,இந்த வழக்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இ.பி.எஸ்., வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், இ.பி.எஸ்.,க்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு அளித்து உள்ளது.

Advertisement