மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு: ராகுல்

புதுடில்லி: காஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்போம் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக விவாதிக்க டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா, நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியதாவது: ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டனர். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. காஷ்மீரில் அமைதி நிலவ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: பிரதமர் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால், இன்று நடந்த முக்கியமான இந்த கூட்டத்தில் அவர் பங்கேற்று இருக்க வேண்டும். மூன்று அடுக்கு பாதுகாப்பு இருந்தும் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது எப்படி? பாதுகாப்பு குறைபாடு உள்ளது. பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டின் நலனுக்காக மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிப்போம். இந்த தாக்குதல் சம்பவம் கண்டனத்திற்கு உரியது. நாடு ஒற்றுமையாக உள்ளது என்ற செய்தியை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம் என்றார்.
ராகுல் கூறியதாவது: பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு அனைவரும் கண்டனம் தெரிவித்தோம். அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ராகுல் காஷ்மீர் பயணம்
இதனிடையே, பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற ராகுல் நாளை காஷ்மீர் செல்ல உள்ளார்.






மேலும்
-
இன்று இனிதாக.... (25.04.2025) திருவள்ளூர்
-
அகரத்தில் புது அங்கன்வாடி மையம் அமைக்க கிராமத்தினர் கோரிக்கை
-
சாலை விரிவாக்க பணிகள் குறித்து தகவல் பலகை வைக்க கோரிக்கை
-
சீமான் - பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு தந்தை, மகன் உறவு என நா.த.க., பதில்
-
சட்டசபையில் இன்று...
-
ஊழியர் தற்கொலை வழக்கில் பெண் நீதிபதி மாற்றம்