அகரத்தில் புது அங்கன்வாடி மையம் அமைக்க கிராமத்தினர் கோரிக்கை

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் ஊராட்சியில் அடங்கியது அகரம் கிராமம்.

இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு, பிறந்த குழந்தை முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட 50 குழந்தைகள் உள்ளனர்.

ஆனால், இங்கு அங்கன்வாடி மையம் இல்லை.

இதனால், 1 கி.மீ., தொலைவில் உள்ள நெல்லிக்குப்பம் அங்கன்வாடி மையத்திற்கு, பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள், அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் இணை உணவு பெற சிரமப்படுகின்றனர்.

இதனால், அதிக வெயில் மற்றும் மழைக் காலங்களில், குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்புவதில், பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர்.

இதுதொடர்பாக இப்பகுதிவாசிகள், ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் அளித்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து, அகரம் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement