பிரதமர் மோடி மே 3ல் சென்னை வருகை?

சென்னை : ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பனில், 550 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 6ம் தேதி திறந்து வைத்தார்.
அதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில், தனியார் பல்கலையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா ஆகியோர், மே 3ம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், அப்பாவி மக்கள் 27 பேர் உயிரிழந்தனர். அதற்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கை தொடர்பாக, ராணுவம், வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
எனவே, 'மோடியின் சென்னை பயணம் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது' என, தமிழக பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (2)
Priyan Vadanad - Madurai,இந்தியா
25 ஏப்,2025 - 07:22 Report Abuse

0
0
vivek - ,
25 ஏப்,2025 - 07:44Report Abuse

0
0
Reply
மேலும்
-
3,935 பணியிடத்துக்கு குரூப் 4 தேர்வு அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி.,
-
காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி!
-
காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி
-
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சத்ய சாய்பாபா ஆராதனை மஹோத்சவம்
-
வார்த்தை வலையில் சிக்கிய தி.மு.க., அரசு!
-
டில்லி பாக்., துாதரகம் முன் கொந்தளித்த பொதுமக்கள்!
Advertisement
Advertisement