கடலோர காவல் படை ஒத்திகை நிகழ்ச்சி

காரைக்கால்: காரைக்காலில் இந்திய கடலோர காவல் படை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டத்தில் இந்திய கடலோர காவல் படை சார்பில் ஆண்டுதோறும் கடல் பாதுகாப்பு மற்றும் மீனவர்கள் நலன் கருதி பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதன் அடிப்படையில் நேற்று காரைக்கால் தனியார் துறைமுகத்திலிருந்து

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சவுரியா கப்பலில் மூலம் சுமார் 8 நாட்டிகல் மைல் தொலைவில் கப்பல் மூலம் நடுக்கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.பின்னர் நடுக்கடலில் நடைபெற்ற பாதுகாப்பு மீட்பு ஒத்திகை நாகையில் இருந்து இலங்கை செல்லும் பயணிகள் படகில் விபத்து ஏற்பட்டது போல், மீட்பு ஒத்திகை காரைக்கால் கடலோர பாதுகாப்பு படை கப்பல்கள், விமானங்கள் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்ட காட்சி நடந்தது.

இதில் 5 கப்பல்களில் வந்த கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஹெலிகாப்டர் மற்றும் டோர்னியர் டோர்னியர் விமானம் மூலம் மீட்டும் பணிகள் தத்ரூபமாக செய்துகாட்டினர்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சோம சேகர் அப்பாராவ், நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ். சீனியர் எஸ்.பி.,லட்சுமி செவுஜன்யா. கமாண்டிங் அதிகாரி செளமங் சந்தோலயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement