கோவையில் சோகம்...! நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாப பலி

6


கோவை: கோவை மாவட்டம் ஆழியாறுக்கு சுற்றுலாவுக்கு வந்த சென்னை பூந்தமல்லி தனியார் பிசியோதெரபி கல்லூரி மாணவர்கள் 3 பேர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் தடுப்பணைக்கு சென்னை பூந்தமல்லி தனியார் பிசியோதெரபி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வந்திருந்தனர். அப்போது, தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப் ஆகிய கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஆற்று நீரில் மூழ்கி பலியாகினர்.



சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டனர். இது குறித்து உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். நீரில் மூழ்கி, மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement