சப்- கலெக்டர் ஆய்வு: குவாரி மீது வழக்கு

தேவதானப்பட்டி: பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத்பீடன் குள்ளப்புரம் பகுதியில் ஜெயசுதா குவாரியினை ஆய்வு செய்தார்.

குவாரி நிர்வாகம் அனுமதி கோரிய இடத்திற்கு அருகே சேமிப்பு இருப்பு மையத்தின் விதியை மீறி செயல்பட்டதாக தெரிய வந்தது. குள்ளப்புரம் வி.ஏ.ஓ., ராஜ்குமார் புகாரில், ஜெயமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட குவாரி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்தனர்.-

Advertisement