காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி அல்தாப் லல்லி சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முன்னணி தளபதி அல்தாப் லல்லி சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது பந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வந்தது.
அப்பகுதியில் காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் முன்னணி தளபதி அல்தாப் லல்லி சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.
இதற்கிடையே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகப்படும், காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் அடில் மற்றும் ஆசிப்பின் வீடுகளை இந்திய ராணுவம் வெடி வைத்து தகர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.














மேலும்
-
பழங்குடியினருடன் நடனமாடி மகிழ்ந்த துணை ஜனாதிபதி
-
இந்தியாவிற்கு இடம் பெயரும் ஐபோன் உற்பத்தி: ஆப்பிள் நிறுவனம் முடிவு
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: சென்னை அணி பேட்டிங்
-
வக்ப் சட்டத்திற்கு தடை விதிக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு
-
நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை செயலர்கள் மாற்றம்
-
ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.3 ஆக பதிவு