மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு; சட்டசபையில் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: ''மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி பாசனத்திற்காக திறக்கப்படும்'' என்று அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.
சட்டசபையின் இன்றைய கூட்டத்தொடரில், மேட்டூர் அணை திறப்பு மற்றும் தூர்வாரும் பணிகள் குறித்து, சட்டசபையில் துரைமுருகன் பேசியதாவது: நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஆறுகள் வாய்க்கால்கள் வடிகால்களில் மண் திட்டுகள் உள்ளது.
தண்ணீர் தங்குயின்றி செல்ல, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 5,021 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாசன கால்வாய்களை தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தூர்வாரும் திட்டத்தில் ரூ. 98 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மே மாதம் இறுதிக்குள் தூர்வாரும் பணிகள் முடிக்கப்படும். ஜூன் 12ம் தேதி பாசனத்திற்காக திறக்கப்படும். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பழங்குடியினருடன் நடனமாடி மகிழ்ந்த துணை ஜனாதிபதி
-
இந்தியாவிற்கு இடம் பெயரும் ஐபோன் உற்பத்தி: ஆப்பிள் நிறுவனம் முடிவு
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: சென்னை அணி பேட்டிங்
-
வக்ப் சட்டத்திற்கு தடை விதிக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு
-
நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை செயலர்கள் மாற்றம்
-
ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.3 ஆக பதிவு
Advertisement
Advertisement