ரேவதி நர்சிங் கல்லுாரி பட்டமளிப்பு விழா

திருப்பூர்; அவிநாசியில் செயல்படும் ரேவதி நர்சிங் கல்லுாரி பட்டமளிப்பு விழா நடந்தது. ரேவதி இன்ஸ்டிடியூஷன்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். தலைமை விருந்தினராக, தமிழக நர்ஸ்கள் மற்றும் மகப்பேறு தாய்மார்கள் கவுன்சில் பதிவாளர் டாக்டர் அனிகிரேஸ் கலைமதி பங்கேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் (பொறுப்பு) டாக்டர் பத்மினி, பேசினார்.

இதில், 2016 முதல், 2019 வரை பயின்ற, பி.எஸ்.சி., நர்சிங் மாணவிகள் மற்றும், 2021, 2022 வரை பயின்ற, எம்.எஸ்.சி., நர்சிங் மாணவியர் பட்டம் பெற்றனர். படிப்பு முடித்தவர்களுக்கு பட்டம், கல்வியாண்டின் சிறந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக ரேவதி ஈஸ்வரமூர்த்தி, டாக்டர் விஷ்ணு ராகவ், டாக்டர் ஹரி பிரணவ், ரேவதி நர்சிங் கல்லுாரி முதல்வர் டாக்டர் அகல்யா மற்றும் ரேவதி மெடிக்கல் சென்டர் நர்சிங் இயக்குனர் டாக்டர் கற்பகம் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement