விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்

9

சென்னை: ''விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்'' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தமிழக அரசு, மகளிருக்கு மாதம், 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, 2024 செப்டம்பரில் துவக்கியது. விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இது குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:


குடும்பத்தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது, 1 கோடியே 34 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பலர் இந்த திட்டத்தில் விடுபட்டுள்ளனர் என்ற செய்தி அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.


எனவே வரும் ஜூன் மாதம் 4ம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டத்தின் அடிப்படையில், 9000 இடங்களில் கோரிக்கைகள் கேட்கும் இடங்கள் நடைபெறவிருக்கிறது. விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement