இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் காலமானார்!

பெங்களூரு: 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கஸ்துாரிரங்கன், 84, வயது மூப்பு காரணமாக, பெங்களூருவில் இன்று (ஏப்ரல் 25) காலமானார்.
கேரளாவில் அக்டோபர் 24ம் தேதி 1940ம் ஆண்டு கஸ்துாரிரங்கன் பிறந்தார். 1994ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான 'இஸ்ரோ'வின் தலைவராக இருந்தார். இவரது பணிக்காலத்தில் இஸ்ரோ புதுப்புது சாதனைகளை படைத்து சர்வதேச அளவில் புகழ்பெற்றது.
பணி ஓய்வுக்கு பிறகு, ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணிபுரிந்துள்ளார்.
இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ , பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய 3 உயரிய விருதுகளை வழங்கியுள்ளது. ராஜ்யசபா உறுப்பினராகவும், மத்திய திட்டக்குழு உறுப்பினராகவும் கஸ்துாரி ரங்கன் பணியாற்றினார்.
கஸ்தூரிரங்கன் தலைமையில் உருவாக்கப்பட்ட வரைவுக் குழுவின் பரிந்துரைகளின் படியே புதிய கல்விக் கொள்கை 2020ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு விரிவான அறிக்கை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் இரங்கல்
கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடிவெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் அறிவியல் மற்றும் கல்விப் பயணத்தில் மிகவும் போற்றத்தக்கவராக இருந்த கஸ்தூரி ரங்கனின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அவரது தலைமைப் பண்பு மற்றும் தேசத்துக்கான தன்னலமற்ற சேவை மக்களால் என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். இஸ்ரோவில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய அவர், இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை விடாமுயற்சியுடன் புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றார். இது நாட்டுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்க வழிவகுத்து. அவரது சீரிய தலைமைப் பண்பு நாட்டின் லட்சியமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தப்படுவதை செயலாக்கியது.
கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் அறிவியல் மற்றும் கல்விப் பயணத்தில் மிகவும் போற்றத்தக்கவராக இருந்த கஸ்தூரி ரங்கனின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அவரது தலைமைப் பண்பு மற்றும் தேசத்துக்கான தன்னலமற்ற சேவை மக்களால் என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். இஸ்ரோவில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய அவர், இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை விடாமுயற்சியுடன் புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றார். இது நாட்டுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்க வழிவகுத்து. அவரது சீரிய தலைமைப் பண்பு நாட்டின் லட்சியமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தப்படுவதை செயலாக்கியது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் கூறியுள்ளார்.









மேலும்
-
ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது: தொலைநோக்கு திட்டம் தீட்டுகிறது மத்திய அரசு
-
யானை தந்தத்தை விற்க முயற்சி; அடகு கடை உரிமையாளர், தரகர்கள் உள்பட 7 பேர் கைது
-
கத்துவாவில் பயங்கரவாதிகள் பதுங்கலா: ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை
-
இந்தியா Vs பாகிஸ்தான்: யாரின் விமானப்படை சக்தி வாய்ந்தது? ஓர் அலசல்
-
பழங்குடியினருடன் நடனமாடி மகிழ்ந்த துணை ஜனாதிபதி
-
இந்தியாவிற்கு இடம் பெயரும் ஐபோன் உற்பத்தி: ஆப்பிள் நிறுவனம் முடிவு