கடினமான காலங்களில் இந்தியாவுடன் துணை நிற்போம்: பஹல்காம் சம்பவம் குறித்து இலங்கை கருத்து

கொழும்பு: பஹல்காம் சம்பவம் போல கடினமான காலங்களில் இந்தியாவுடன் துணை நிற்போம் என்று இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகே தெரிவித்துள்ளார்.
ஜம்முகாஷ்மீர் பஹல்காம் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் தொடர்பு உடையவர்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டது. அவர்கள் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதல் நடடிவக்கையை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா கூர்மைப்படுத்தி உள்ளது. உலக நாடுகள் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இந்தியாவுக்கு ஆதரவாகவும் கருத்துகள் தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில், கடினமான காலங்களில் இந்தியாவுடன் துணை நிற்போம் என்று பஹல்காம் சம்பவத்தை முன் வைத்து இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகே கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமது சமூகவலை தள பதிவில் கூறி உள்ளதாவது;
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் ஒற்றுமையையும், நமது உறுதிப்பாட்டையும் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தேன்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இதயங்கள் அஞ்சலி செலுத்துகின்றன. இந்தக் கடினமான காலங்களில் நாங்கள் இந்தியாவுடன் துணை நிற்போம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.






மேலும்
-
எல்லையில் நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவம் பதிலடி
-
சொத்து குவிப்பு வழக்கில் இன்னொரு அமைச்சருக்கும் சிக்கல்; பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து
-
10 நகரங்களில் வெயில் சதம்: வானிலை மையம் தகவல்
-
'வரும் தேர்தலில் நம் கொள்கை எதிரிகளை தோற்கடிக்க வேண்டும்'
-
பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
-
பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு